கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கள் கிழமைதோறும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். இந்நிலையில், டிசம்பர் 5ம் தேதியன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி தமிழகம் முழுவதும் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
இதனால், வரும் 12.12.2016 திங்கட்கிழமை அன்று நடைபெறவிருக்கும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்படுகிறது. மீண்டும் 19.12.2016 அன்று வழக்கம்போல் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார்.