சென்னை மாநகரத்தை தற்போது மையம் கொண்டு வர்தா என்னும் புயல் பலத்த காற்றுடன் வீசிவருகிறது. மணிக்கு 110 முதல் 160 கிலோ மீட்டர் வரை வர்தா புயல் காற்று வீசுவதால் சென்னையில் பல இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மழையும் பெய்து வருவதால் வெள்ளப் பெருக்கு அபாயமும் ஏற்பட்டுள்ளது. பல ஆயிரம் மக்கள் அரசு பாதுகாப்பு மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, தற்போது வர்தா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிடும் வகையில் கோவை மாநகராட்சியின் சார்பில் 150 துப்புரவு பணியாளர்கள் அனுப்பிவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் , உணவு, உடை, துண்டு, போர்வை, சோப்பு, பற்பசை, தண்ணீர் பாட்டில்கள், ரொட்டி- ஜாம், பிஸ்கட் மற்றும் மருந்து மாத்திரைகள், காயத்திற்கான மருந்துகள் உள்ளிட்டவை அனுப்பிவைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் கோவை மாநகர மக்கள் தங்களால் இயன்றதை வழங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று இரவு 8 மணிக்குள் டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ள கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேற்குறிப்பிட்ட பொருட்களை வழங்குமாறு மாநகராட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புக்கு: 8056472237, 7708950011, 9791985668