வர்தா புயலால் பாதிக்கப்பட்ட சென்னைக்கு கோவை மாநகராட்சியின் சார்பில் துப்புரவாளர்கள் மற்றும் உணவுப் பொருட்கள் அனுப்பிவைப்பு

சென்னை மாநகரத்தை மையமாகக் கொண்டு வர்தா என்னும் புயல் திங்களன்று பலத்த காற்றுடன் வீசியது. இதில் மணிக்கு 130 முதல் 190 கிலோ மீட்டர் வேகம் வரை வர்தா புயல் காற்று வீசியதால் சென்னையில் பல இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டன. மழையும் பெய்ததால் பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியதைத் தொடர்ந்து மக்கள் அரசு பாதுகாப்பு மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, தற்போது வர்தா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிடும் வகையில் கோவை மாநகராட்சியின் சார்பில் 150 துப்புரவு பணியாளர்கள் மற்றும் உணவு, உடை, துண்டு, போர்வை, சோப்பு, பற்பசை, தண்ணீர் பாட்டில்கள், ரொட்டி- ஜாம், பிஸ்கட் மற்றும் மருந்து மாத்திரைகள், காயத்திற்கான மருந்துகள் உள்ளிட்டவை அனுப்பிவைக்க முடிவுசெய்யப்பட்டது.

இதற்கு, கோவை மாநகர மக்கள் தங்களால் இயன்ற பொருட்களை வழங்க அழைப்பு விடுக்கப்பட்டதைத்தொடர்ந்து, திங்களன்று இரவு பல நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டன. 



இதைத்தொடர்ந்து, சென்னையில் வர்தா புயலால் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேட்டை சரி செய்யும் விதமாக கோவை மாநகராட்சியின் சார்பில் 150 துப்புரவு பணியாளர்கள், 10 துப்புரவு பணிமேற்பார்வையாளர்கள் மற்றும் 2 துப்புரவு ஆய்வாளர்கள் ஆகியோர் போதிய பாதுகாப்பு உபகரணங்கள், தளவாட சாமான்களுடன் சென்னைக்கு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டன.

முன்னதாக, அந்த வாகனங்களை கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் கொடியசைத்து துவக்கிவைத்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...