புத்தாண்டு துவக்கத்தின் போது இளைஞர்கள் சாலையில் அதிவேகமாக இருசக்கர வாகனம் மற்றும் கார்களை ஓட்டுவர். இதன் மூலம் அவர்கள் தங்களது மகிழ்ச்சினை வெளிப்படுத்தி புத்தாண்டை வரவேற்பது வழக்கம். ஆனால், அவ்வாறு சாலையில் விதிகளை மீறி வாகனத்தை இயக்கும் போதும் ஒவ்வொரு ஆண்டு துவக்கத்திலும் பல நூறு விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.
இதனை கருத்தில்கொண்டு கோவை மாநகர காவல் துறையின் சார்பில் வரும் புத்தாண்டிற்காக ஒரு திட்டம் துவங்கப்பட்டுள்ளது. அதில், புத்தாண்டை முன்னிட்டு அதிவேகத்தில் வாகனத்தை இயக்குபவர்கள் கைது செய்யப்படுவதுடன், ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாமில் அமரவைக்கப்படுவர்.
பின், அவர்களுக்கு தண்டனை வழங்குவதுடன் புதுவிதமாக இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்குபெற ஆர்வமுள்ள மற்றும் காவல் துறையுடன் இணைந்து செயல்பட தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதில் ஆர்வமுள்ளவர்கள், 94981 76444 என்ற தொலைபேசி எண்ணில் கோவை மாநகர தெற்கு காவல் துணை ஆணையர் அனிதா-வை தொடர்புகொண்டு தகவல் பெறலாம்.