கோவை மாவட்ட ஜமாதே இஸ்லாமி ஹிந் ஆசாத் நகர் வட்டமும், சமூகசேவை பிரிவும் இணைந்து கோவை போத்தனூரில் செயல்பட்டு வரும் குழந்தைகளுக்கான குடும்பம் (Family for children) எனும் குழந்தைகள் காப்பகமும், கோவை நஞ்சுண்டாபுரத்தில் செயல்பட்டு வரும் மெர்ஸி ஹோம் ஆகிய இடங்களுக்கும் சென்று மிலாது நபியை கொண்டாடினர்.
இந்நிகழ்வில் வட்ட ஊழியர்கள் அனைவரும் குடும்பத்தோடு கலந்து கொண்டு அக்குழந்தைகளுக்கு உணவு மற்றும் உடைகள் கொடுத்து அவர்களை மகிழ்வித்தனர்.
இதைத்தொடர்ந்து, ஜனாப் அப்துல் கபூர் குழந்தைகளுக்கு இறைவன் நமக்கு வழங்கிய அருட்கொடைகளை நினைவு கூர்ந்து சிறப்புரையாற்றினார்.