ஈஷா யோகா மையத்தின் சார்பில் வரும் டிசம்பர் 17 மற்றும் 18ம் தேதிகளில் தமிழில் யோகா பயிற்சி நடைபெறவுள்ளது. இந்த பயிற்சியில் முக்கியத்துவமாக "சாம்பவி மகா முத்ரா கிரியா" என்னும் யோகா பயிற்சி வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியானது மிகவும் எளிமையானது மற்றும் பலன்தரக்கூடியதாகும்.

முதன் முறையாக இப்பயிற்சியானது தமிழகம் முழுவதும் 62 பகுதிகளில் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. மேலும், இதில், வேலைத்திறன், புதுவித சிந்தனைகள், திறன் மேம்படுத்துதல் மற்றும் கவனத்தினை ஒருங்கிணைத்தல், நியாபகத்திறன், நிறைவேற்றுத்திறன் உள்ளிட்டவற்றை மேம்படுத்துவது குறித்து யோகா கற்பிக்கப்பட உள்ளது.
இப்பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் 8300011111 என்ற எண்ணில் தொடர்புகொண்டு முன்பதிவு செய்ய வேண்டும். இதுகுறித்தான மேலும் விபரங்களுக்கு 9442641563 என்ற எண்ணிற்கு தொடர்புகொள்ளலாம்.