சென்னையில் டிசம்பர் 12ம் தேதி அன்று வார்த் புயல் தாக்கியதால், சென்னை நகரத்தில் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தற்போது சென்னை மாநகரில் இதுவரை 30% மின்விநியோகம் சீர் செய்யப்பட்டுள்ளது. பல இடங்களில் 10,000 மின் கம்பங்கள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட மின்மாற்றிகள் சேதமடைந்துள்ளன.
எனவே, சேதமடைந்த மின் கம்பங்கள் மறுசீரமைப்பு செய்ய ஆட்கள் பற்றாக்குறையால், மீட்பு நடவடிக்கைகளை உதவுவதுதன் நோக்கமாக, கோவையில் இருந்து 6 மின்வாரிய வட்டங்களில், 60 ஊழியர்கள் கொண்ட ஒரு குழு கோயம்புத்தூர் செயற் பொறியாளர் முருகையா தலைமையில் இன்று இரவு 9:00 மணி அளவில் கோவை மின்பகிர்மான கழகம் பவர் ஹவுஸ்-ல் இருந்து புறப்பட்டு சென்னைக்கு சென்றனர்.