மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையே மலை ரயில் சேவை ரத்து


மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையேயான மலை ரயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக ரயி‌ல் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் குன்னூர்க்கு மலை ரயில் சேவை செயல்பட்டு வருகிறது, இந்நிலையில், கடந்த இரு தினங்களாக உதகை, நீலகிரி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் ஆங்காங்கே மரம் மற்றும் மண் சரிவு ஏற்பட்டு வருகிறது.



மேட்டுப்பாளையத்தில் இருந்து 17 கிலோ மீட்டர் தூரம் உள்ள ஹில்கிரோ என்னும் பகுதியில் ஏற்பட்டுள்ள மண் சரிவு காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பாறைகளும் ரயில் பாதையில் விழுந்துள்ளதால் அதனை அகற்றும் பணியில் மீட்புக் குழுவினர் மற்றும் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக மேட்டுப்பாளையம் - குன்னூர்க்கான ரயில் சேவையை இன்று ஒரு நாள் ரத்துசெய்து ரயில்வே நர்வாகம் அறிவித்துள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...