நாடு முழுவதும் தேசிய மற்றும் நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூட உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
நெடுஞ்சாலை ஓரங்களில் செயல்படும் மதுக்கடைகளால் சாலை விபத்துகள் அதிகம் ஏற்பட்டு வருகின்றன. இதனால் நெடுஞ்சாலைகளில் செயல்படும் மதுபானக் கடைகளை மூடவேண்டும் என மூத்த வழக்கறிஞர் கே.பாலு உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தொடர்ந்தார்.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரணை மேற்கொண்டது.
இவ்வழக்கிற்கான தீர்ப்பை இன்று வழங்கிய உச்சநீதிமன்றம், மாநில மற்றும் தேசிய நெஞ்சாலைகளில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூட அதிரடியாக உத்தரவிட்டது. மேலும், தற்போதைய மதுக்கடைகளை 2017-ம் ஆண்டு ஏப்ரல் வரை நடத்தலாம் என்றும் அதன் பின்னர் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளை திறக்க மாநில அரசுகள் அனுமதிக்கக் கூடாது எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.