
கடந்த அக்டோபர் மாதம் 22த் தேதியன்று கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தற்போது வரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.
மேலும், ஆகஸ்ட் 8ம் தேதியன்று சேலத்தில் இருந்து சென்னைக்கு ரயிலில் கொண்டுசெல்லப்பட்ட 5.75 கோடி ரூபாய் கொள்ளை சம்பவத்திலும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

இதைத்தொடர்ந்து, இந்த வழக்குகள் குறித்த அடுத்தகட்ட விசாரணைகளை மேற்கொள்ள சிபிசிஐடி பொது ஆய்வாளர் மகேஷ் குமார் சிங் மற்றும் சிபிசிஐடி காவல்துறை கண்காணிப்பாளர் அமீத் குமார் சிங் ஆகியோர் கோவை பி.ஆர்.எஸ் மைதானத்தில் உள்ள அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.