ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி, தனது 31வது விளக்கேற்றும்
விழாவை, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை வளாகத்தில் உள்ள
ஸ்ரீமதி.வேலுமணியம்மாள் நினைவரங்கத்தில் கொண்டாடியது. இவ்விழாவில் கல்லூரி
முதல்வர் மருத்துவர் டி.நிர்மலா, வரவேற்புரையாற்றி துவக்கிவைத்தார்.
கே.எம்.சி.எச் செவிலியர் கல்லூரி முதல்வர் மருத்தவர் எஸ்.மாதவி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் துணை நிர்வாக அறங்காவலர் ஸ்ரீ.து.லக்ஷ்மிநாராயணஸ்வாமி இவ்விழாவிற்கு தலைமை வகித்தார்.

இதைத்தொடர்ந்து, முதலாம் ஆண்டு செவிலியர் மாணவர்கள் அகல் விளக்கேற்றி பிளாரன்ஸ் நைட்டிங்கேல் காட்டிய வழியை பின்பற்ற உறுதிமொழி எடுத்தனர். தொடர்ந்து, கல்லூரியின் துணை முதல்வர் பேராசிரியை எஸ்.கிரிஜாகுமாரி பிளாரன்ஸ் நைட்டிங்கேல் உறுதிமொழியை வாசிக்க, மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர். துணைபேராசிரியை வி.பிருந்தா நன்றியுரையுடன் விழாவினை நிறைவுசெய்தார்.