ஆட்டோ ஓட்டுனர்களின் அவல நிலை !

என்ன பிரச்சனை ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ?

மீட்டருக்கு மேல பத்துருவா கொடுங்க..! என்று கூறிவிட்டு நாம் செல்லவேண்டிய இடத்திற்கு பத்திரமாக நம்மை கொண்டு சேர்ப்பவர்கள் தான் இந்த ஆட்டோ ஓட்டுனர்கள். சமீப காலமாக இவர்கள் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் தலை தூக்கியுக்கியுள்ளது. மாதம் பிறந்துவிட்டால் விடுமுறை போக மீதி சம்பளத்தை வங்கிக் கணக்கில் செலுத்திவிட்டு, அம்மாத வாழ்கையை அந்த வருமானத்தை கொண்டு நடத்துவது போல் அல்ல  இவர்களது வாழ்கை.  ஒவ்வொரு ஆட்டோ ஓட்டுனர்களின் அன்றைய வருமானம் தான் அவர்களது அன்றைய வாழ்கையை தீர்மானிக்கிறது.

இன்று எத்தனை வாடகை கிடக்குமோ? கடனை எப்படி கட்டுவோமா? நாலு வாடகை கிடைத்தால் போதும்..!  என்ற அடிப்படை எதிர்பார்ப்புகளுடனே இவர்களது காலைப் பொழுது விடிகிறது. சில நாட்களில் சூரிய அஸ்தமனம் வரையில் இவர்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் போவதுண்டு.

அப்படியென்ன இவர்களுக்கு பிரச்சனை என்று பலர் கேட்பது நம் காதில் விழ புறப்பட்டோம் ஆட்டோ ஓட்டுனர்களை சந்திக்க. குறைந்த மீட்டர் கட்டணம், கார்ப்பரேட்டுகளின் வருகை என நீள்கிறது இவர்களது பிரச்சனைகள்.

இது குறித்து சி.ஐ.டி.யூ-வின் கோவை மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளரும், அனைத்து ஆட்டோ சங்கத்தின் கூட்டு கமிட்டி தலைவருமான சுகுமாரன் கூறியதாவது :-

கோவை மாவட்டத்தில் மட்டும் 15  ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள் உள்ளனர். அதவாது 15 ஆயிரம் குடும்பங்கள் இந்த தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர். 






மீட்டர் கட்டணம்

மீட்டர் கட்டண முறையை ஆட்டோ தொழிலாளர்கள் யாரும் எதிர்ப்பதில்லை. சரியான தொகையை அரசு அறிவிக்க வேண்டும் என்று தான் கூறிவருகிறோம். அரசின் தற்போதய ஆணையின் படி, கிலோமீட்டருக்கு ரூ.12.5 –ம் , குறைந்தபட்ச கட்டணமாக, அதாவது 1.8 கிலோமீட்டர் தொலைவுக்கு ரூ.25 மட்டுமே வசூலிக்க வேண்டும். இந்த குறைந்த கட்டணத்தை வைத்துக்கொண்டு ஒரு ஆட்டோ தொழிலாளி எப்படி அவனது வாழ்கையை நடத்த முடியும்?. கோவை மாவட்டம் என்பது சென்னையை போல அல்ல. இங்கு வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்தோர் அதிக அளவில் வருவதில்லை. உள்ளூர் வாசிகள் தான் ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரம். அவர்களும் அதிக அளவில் ஆட்டோக்களை பயன்படுத்துவதில்லை. கிடைக்கும் ஒரு சில வாடகைகளில் குறைந்த கட்டணத்தை வசூலிப்பது ஒவ்வொரு ஆட்டோ தொழிலாளியின் வாழ்வாதாரத்தை பாதிக்கும்.

பிரச்சனைகள் ?

அரசின் இந்த மிகக்குறைந்த கட்டண ஆணையை திரும்ப பெற்று, கிலோ மீட்டருக்கு ரூ.20–ம் , குறைந்தபட்ச கட்டணமாக, அதாவது 1.8 கிலோமீட்டர் தொலைவுக்கு ரூ.40  ஆக ஆட்டோ வாடகையை நிர்ணயிக்க வேண்டி போராடி வருகிறோம். அந்த நேரத்தில் தான் பெரு முதலாளிகள் இந்த தொழிலில் நுழைந்தனர்.

ஆட்டோ ஓட்டுனருக்கு நாள் ஒன்றிற்கு அதிகபட்சமாக மூன்றிலிருந்து நான்கு வாடகைகள் கிடக்கின்றன. அவ்வப்போது ஒரு வாடகை கூட கிடைக்காத நிலையும் ஏற்படுகிறது. பண முதலைகள் இந்த தொழிலுக்குள் காலடி எடுத்து வைத்த காலம் தொட்டு இந்த நிலை அதிகரித்து வருகிறது. அவர்கள் அதிக செலவில் தொடங்கும் தொழிலில் 50 க்கும் மேற்பட்ட ஆட்டோக்களை வாங்கி அவற்றை வாடகைக்கு விடுகின்றன. அது போன்ற ஆட்டோக்களை ஓட்டும் ஓட்டுனர்களுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது ஆயிரத்து ஐநூறு ரூபாய் வருமானம் ஈட்ட வேண்டும் என்ற விதியை வகுத்துள்ளனர். விளம்பரங்கள் மற்றும் தொழில் நுட்பங்களால் இணையம் வரை சென்று வாடிக்கையாளர்களை ஈர்த்துக் கொள்கின்றனர். இதனால் பாதிக்கப்படுவது அடிமட்ட தொழிலாளர்கள் தான்.






தீர்வு ?

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் படி இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஆட்டோ கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். ஆனால், தற்போதைய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகியும் புதிய கட்டணம் நிர்ணயிக்கப்படமால் உள்ளது. மாதம் இருமுறை பெட்ரோல் விலை உயரும் இந்த கால கட்டத்தில் நான்கு ஆண்டுகளுக்கு அதே கட்டண முறை என்பது உழைக்கும் வர்க்கத்தை நோகடிக்கும் செயல்.

உடனடியாக அரசு புதிய ஆட்டோ கட்டணத்தை வெளியிட்டு அமல்படுத்த வேண்டும். உத்தேச முடிவுகளை எடுக்காமல், தொழிற் சங்கங்களோடு கலந்து பேசி பின்னர், முறையான கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். தொழிலாளிகளான ஆட்டோ ஓட்டுனர்களுக்கு முறையான வாடகை கிடைக்கப்பெறும் போது கார்பரேட் நிறுவனங்களை நினைத்து கவலைப்பட வேண்டியதில்லை. அதோடு, அனைத்து தரப்பிலும் ஒரே மாதிரியான கட்டணம் அமலுக்கு வரும் நேரத்தில் மக்கள் தேடித் தேடி கார்பரேட்களிடம் செல்லாமல், கை தட்டி ஆட்டோக்களை கூப்பிடும் நிலை ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

‘சர்வைவல் ஆப் த பிட்டஸ்ட்’ என்ற வரிகளை கூர்ந்து கவனிக்கும் போது அது இவர்கள் போன்ற சாமனிய மக்களிடம் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை நம்மால் உணர முடியும். ‘தகுதியும் திறமையும் இருந்தால் தப்பி பிழைத்துக்கொள்’ என்பதைப்போல இந்த ஆட்டோ தொழிலார்கள் நித்தம் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை கண்டு, அவர்களால் நம் தொழிலுக்கு பாதிப்பு வந்து விடுமோ என்ற அச்சத்தில் உறைந்து கொண்டிருக்கின்றனர். அரசு இந்த பிரச்சனைகளில் தலையிட்டு ஆட்டோ தொழிலாளர்களுக்கு முறையான கட்டணத்தை அறிவிப்பதன் மூலம் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் வறுமையை போக்க முடியும். 

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...