மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையேயான மலை ரயில் பாதையில் ஏற்பட்டுள்ள மண் சரிவு காரணமாக ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், குன்னூர்- உதகை வரையில் தொடர்ந்து ரயில் சேவை செயல்பட்டு வருகிறது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் குன்னூர்க்கு மலை ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக உதகை, நீலகிரி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் ஆங்காங்கே மரம் மற்றும் மண் சரிவு ஏற்பட்டு வருகிறது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர்க்கு செல்லக் கூடிய மலை ரயில் பாதையில் ஏற்பட்டுள்ள மண் சரிவு காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பாறைகளும் ரயில் பாதையில் விழுந்துள்ளதால் அதனை அகற்றும் பணியில் மீட்புக் குழுவினர் மற்றும் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக மேட்டுப்பாளையம் - குன்னூர் வரையிலான ரயில் சேவை இன்றும், நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், குன்னூரில் இருந்து உதகை வரையிலான ரயில் சேவை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.