நேரு கல்விக் குழுமத்தின் திரு.பி.கே.தாஸ் நினைவு சிறந்த ஆசிரியர்களுக்கான விருது வழங்கும் விழா ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதில், வாழ்நாள் சாதனையாளர் விருதும், சிறந்த ஆசிரியர்களுக்கான விருதும் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, நடப்பாண்டிற்கான பி.கே.தாஸ் விருது வழங்கும் விழா வியாழனன்று நேரு கல்விக் குழுமத்தின் பி.கே.தாஸ் நினைவு அரங்கத்தில் அனுசரிக்கப்பட்டது.

இதில், 10 கலை அறிவியல் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் 12 தொழில்நுட்ப கல்லூரி ஆசிரியர்களுக்கு சிறந்த ஆசிரியர்களுக்கான விருதும், 2 ஆசிரியர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டது.

நேரு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் அனைவரையும் வரவேற்று விருது பெற்ற ஆசிரியர்களை வாழ்த்திப் பேசினார். இதைத்தொடர்ந்து, நேரு கல்விக் குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் இவ்விழாவில் முன்னிலை வகித்து பேசியதாவது:- பார்வையாளர்களாக அமர்ந்திருக்கும் ஆசிரியர்கள் எதிர்காலத்தில் இதுபோல் விருதினைப் பெற வேண்டும். இந்த கல்வி நிறுவனத்தில் வளர்ச்சி என்பது தரமும், நேரு கல்விக் குழுமத்தின் நிறுவன முறையையும் பி.கே.தாஸ் தொலைநோக்குப் பார்வையால் சாத்தியமானது. நேரு கல்விக் குழுமத்தின் தரம் ஆசிரியர்கள் கையில் உள்ளது. குரு கடவுளுக்கு மேலாக கருதப்படுகிறார்கள்'' என்றார்.

இதைத்தொடர்ந்து, நேரு கல்விக் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரியும், செயலாளருமான பி.கிருஷ்ணகுமார் பரிசு பெற்ற ஆசிரியர்களை வாழ்த்திப் பேசினார். தொடர்ந்து, தங்களது அறிவினையும், தரத்தினையும் மேம்படுத்த வேண்டும் என கூறினார்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற டாக்டர் மன்பிரீத் சிங் மன்னா ஏஐசிடிஇ இயக்குநர் பேசுகையில், ஆசிரியர்கள் தங்கள் அறிவை மேம்படுத்திக் கொள்வது தேவை. தொடர்ந்து, தங்களது திறனை மேம்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். பி.கே.தாஸ்-யின் தொலைநோக்குபார்வையால் தான் நேரு கல்விக் குழுமம் இத்தகைய வளர்ச்சியை அடைந்துள்ளது. மேலும், அவர் காலத்தில் கல்லூரி துவங்குவதற்கான உறுதியான மனம் பாராட்டத்தக்கது'' என்றார்.