2017-ம் ஆண்டு மார்ச் 2ம் தேதியன்று 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கும் என தேர்வுத் துறை அறிவித்துள்ளது. 2016- 17-ம் ஆண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 2ம் தேதி தொடங்கும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதேபோல் மார்ச் 8-ல் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கும் எனவும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை
02.03.2017 | வியாழன் | தமிழ் 1 |
03.03.2017 | வெள்ளி | தமிழ் 2 |
06.03.2017 | திங்கள் | ஆங்கிலம் 1 |
07.03.2017 | செவ்வாய் | ஆங்கிலம் 2 |
10.03.2017 | வெள்ளி | வணிகவியல், வீட்டு அறிவியல், புவியியல் |
13.03.2017 | திங்கள் | வேதியியல், கணக்கியல் |
17.03.2017 | வெள்ளி | தொடர்புவழி ஆங்கிலம், இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், உயிரி வேதியியல், கூடுதல் மொழிப்பாடம் |
24.03.2017 | வெள்ளி | தொழிற்படிப்பு எழுத்துத் தேர்வு, அரசியல் அறிவியல், செவிலியர் (பொது) மற்றும் புள்ளியியல் |
27.03.2017 | திங்கள் | கணிதம், விலங்கியல், நுண் உயிரியல், உணவுச் சத்து மற்றும் உணவுப் பழக்கம் |
31.03.2017 | வெள்ளி | உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம் |
10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணை
08.03.2017 | புதன் | தமிழ் பகுதி 1 |
09.03.2017 | வியாழன் | தமிழ் பகுதி 2 |
14.03.2017 | செவ்வாய் | ஆங்கிலம் பகுதி 1 |
16.03.2017 | வியாழன் | ஆங்கிலம் பகுதி 2 |
20.03.2017 | திங்கள் | கணிதம் |
23.03.2017 | வியாழன் | அறிவியல் |
28.03.2017 | செவ்வாய் | சமூக அறிவியல் |
30.03.2017 | வியாழன் | விருப்பப் பாடப்பிரிவு |