இந்திய அரசின் சார்பில் கோவை மாநகராட்சிக்கு டிஜிட்டல் இந்தியா விருது- மாநகராட்சி ஆணையர் தகவல்


டிசம்பர் மாதம் 19-ம் தேதியன்று புதுதில்லி, விஞ்ஞான் பவனில், இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மத்திய அமைச்சகம் கோவை மாநகராட்சிக்கு டிஜிட்டல் இந்தியா விருது வழங்கவுள்ளது என கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, மேலும் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், ''டிஜிட்டல் இந்தியா என்னும் திட்டத்தை இந்திய அரசு தொடங்கியுள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டம் இந்திய சமூகத்தை டிஜிட்டல் வழி அதிகாரமளிக்கப்பட்டதாகவும் பொருளாதார அறிவுமிக்கதாகவும் உறுமாற்றும் நோக்கத்துடன் கூடிய இந்திய அரசின் ஒரு முதன்மையான திட்டமாகும்.

இந்தத் திட்டத்தின் மூலம் அரசின் சேவைகளை மின்மயமாக்கி, மக்களிடம் கொண்டு சேர்ப்பதே இதன் நோக்கமாகும். இந்தத் திட்டத்தின் ஓர் அங்கமாக அனைத்து இடங்களுக்கும் அதிவேக இணைய வசதி அளிக்கப்படும் திட்டத்தின் நோக்கங்களான மின்மயமான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தல், மின்மயத்திலான சேவைகளை வழங்கல், கணினிப் பயன்பாட்டுக்கான கல்வியறிவைப் புகட்டல் ஆகிய திட்டத்திற்காக வழங்கப்படுகிறது.

வருகின்ற டிசம்பர் மாதம் 19-ம் தேதியன்று புதுதில்லி, விஞ்ஞான் பவனில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மத்திய இணை அமைச்சர் பி.பி.சௌதிரி ஆகியோர் இணைந்து கோவை மாநகராட்சிக்கு டிஜிட்டல் இந்தியா வெள்ளி விருது வழங்கவுள்ளார்கள்'.

கோவை மாநகராட்சியின் சார்பாக மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் டிஜிட்டல் இந்தியாவிற்கான வெள்ளி விருதை பெற்றுக்கொள்வார். 

இந்த விருதானது இந்திய அரசாங்கத்தின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆண்டுதோறும் டிஜிட்டல் இந்தியா என்னும் பெயரில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான டிஜிட்டல் இந்தியா விருது கோவை மாநகராட்சிக்கு வழங்கப்படவுள்ளது. கோவை மாநகராட்சி மிக புதுமையான குடிமக்கள் ஈடுபாடு திட்டத்திற்காகவும் மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் இலவச ஒய்-பை (WIFI) திட்டத்தை சிறப்பாக செயலாற்றியதற்காக டிஜிட்டல் இந்தியா வெள்ளி விருது வழங்கப்படவுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...