கோவை மாவட்டம், ஹோப்காலேஜ் பகுதியில் இருந்து இராமானுஜநகர், இஎஸ்ஐ வழியாக சிங்காநல்லூர் செல்லும் முக்கிய சாலையில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக அந்த சாலையின் குறுக்கே பள்ளங்கள் தோண்டப்பட்டு குழாய் பதிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
இதைத்தொடர்ந்து, ஹோப்காலேஜ் முதல் சிங்காநல்லூர் வரையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்ததைத்தொடர்ந்து, தற்போது அப்பாதைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
வாகன ஓட்டிகள், ஹோப்காலேஜ்-யில் இருந்து மசக்காளிபாளையம் சாலை வழியாக சிங்காநல்லூரை அடையலாம் அல்லது ஃபன் மால் வணிகவளாகம் சாலை வழியாக ஜி.வி.ரெசிடெண்சி சென்று பின் திருச்சி சாலையை அடைந்து சிங்காநல்லூர் செல்லலாம்.