கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம், 89-வது வார்டுக்கு உட்பட்ட
சுண்டக்காமுத்தூர் பகுதிகளில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் சுத்தம்
செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதை கோவை மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி
பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து, அதே வார்டுக்கு உட்பட்ட சுண்டக்காமுத்தூர், வேலாயுதம்பிள்ளை வீதி மற்றும் காமாட்சி கோவில் வீதிகளில் மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று தண்ணீர் தொட்டிகளில் அபேட் மருந்தினை ஊற்றுவதையும், தேவையற்ற பொருட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருவதையும் ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வுகளின் போது மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதியுடன் நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், தெற்கு மண்டல ஆணையர் ரவி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் உள்ளனர்.