பள்ளி மற்றும் கல்லூரி பருவத்திலேயும், அரசு பொது விழாக்களிலும் நாம் வாசித்த ரவீந்திர நாத் தாகூர்-உடைய கவிதை தான் இந்த ‘தேசிய கீதம்’. கடந்த 1911-ம் ஆண்டு கல்கத்தாவில் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் தான் இந்த கீதம் முதன் முறையாக பாடப்பட்டது. தொடர்ந்து, கடந்த 1943ம் ஆண்டு இந்திய தேசிய படையின் தேசிய பாடலாக அறிவிக்கப்பட்டது. பின்னர், 1950ம் ஆண்டு ஜனவரி 24-ம் நாளன்று இந்த பாடல் இந்தியாவின் தேசிய கீதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. அன்று தொடங்கி இன்று வரை இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரும் இந்த கீதத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் திரைப்படம் திரையிடப்படுவதற்கு முன்னதாக தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்றும், இந்த உத்தரவை பத்து நாட்களுக்குள் அனைத்து திரையரங்குகளும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கடந்த நவம்பர் மாதம் 30-ம் தேதி உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டது. மேலும், தேசிய கீதம் இசைக்கப்படும் போது திரையில் தேசிய கொடியின் புகைப்படம் இடம்பெற வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது. இந்த தீர்ப்பு வெளியான அடுத்த நாளே பல திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த புதிய உத்தரவுக்கு ஆதரவாகவும், இந்த உத்தரவை விமர்சித்தும் பல்வேறு கருத்துக்களை சமூக வலைத்தளங்கள் வாயிலாக இந்திய மக்கள் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து கோவை மக்கள் தங்கள் கருத்துக்ககளை ‘சிம்ப்ளிசிட்டி’ வாயிலாக வெளிப்படுத்த விரும்பினர். அதன்படி, நம் ஊர் மக்களின் கருத்துக்கள் இந்த செய்தியில் வெளியிட்டுள்ளோம். மக்களின் கருத்துக்கள் பின்வருமாறு :-

ராமகிருட்டிணன் ( த.பெ.தி.க பொது செயலாளர் )
திரையரங்குகளில் தேசிய கீதம் பாடும்போது எழுந்து நிற்க வேண்டும் என்பது தனி மனித சுதந்திரத்தை பாதிக்கும் செயல். தேசிய கீதத்திற்கான மரியாதையை அனைத்து தரப்பு மக்களும் கொடுத்துக்கொண்டு தான் இருக்கின்றனர். ஆனால், தற்போது பிறப்பிக்கப்பட்ட உத்தரவு மரியாதையை கேட்டு வாங்குவது போல் உள்ளது. திரையரங்கில் தேசிய கீதம் இசைக்கப்படும் போது எழுந்து நிற்கவில்லை என்றால் வழக்கு போட்டுவிடுவார்களோ? என்ற அச்சத்திலேயே பலர் எழுந்து நிற்கின்றனர். இந்த உத்தரவு தேவையற்றது.

பார்த்திபன் ( ஐ.டி. ஊழியர் )
இந்தியா பல்வேறு விதங்களில் வேறுபட்டுள்ள தேசம். இங்கு வேற்றுமைகள் பல இருந்தாலும் நம் அனைவரையும் ஒன்றிணைப்பது இந்தியா என்ற ஒற்றை வார்த்தையும் தேசிய கீதமும் தான். திரையரங்குகளில் தேசிய கீதம் பாட்டும் போது மக்களுக்குள் இருக்கும் அந்த ஒற்றுமை உணர்வு மேலோங்கும். ஒவ்வொரு தனி மனிதனும் ஒன்றிணைந்தால் தான் தேசிய ஒற்றுமை பெருகும். எனவே இந்த திட்டம் வரவேற்கத்தக்கது.

ப்ரின்ஸ் ( தொழிலாளி )
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு வரவேற்கத்தக்கது. மக்களிடையே தேசப்பற்று அதிகரிப்பதற்கு இது ஒரு தொடக்க நிலை. முந்தைய கால கட்டத்தில் நாடகங்கள் நடக்கும்போது தேசிய கீதம் மற்றும் இறை வணக்கம் இசைக்கப்பட்டது. நாடகத்தின் வளர்ச்சியே சினிமா. எனவே, ஒரு திரைப்படம் திரையிடப்படுவதற்கு முன்னதாக தேசிய கீதம் இசைக்கப்படுவது சரியானதே. மருத்துவமனைகளில் தேசிய கீதம் இசைக்க உத்தரவு வரவில்லை! ஒரு கேளிக்கைக்கு முன்னதாக நம் தாய் நாட்டிற்கு மரியாதை செலுத்த சிறிது நேரம் நிற்பதால் எந்த பிரச்சனைகளும் எழாது.

சுஸ்மிதா ( கல்லூரி மாணவி )
தேசிய கீதத்திற்கு என்று ஒரு மரியாதை உண்டு. இன்று பல கல்லூரிகளில் தேசிய கீதம் இசைக்கப்படுவதே இல்லை. இது போன்ற இடங்களில் தேசிய கீதத்தை இசைக்க வேண்டும். திரையரங்குகளில் படம் பார்க்க செல்பவர்கள் என்ன நிலையில் இருப்பார்கள் என்றே தெரியாது. தேசிய கீதம் இசைக்கப்படும் போது மக்கள் எழுந்து நிற்கவில்லை என்றால் அதில் பல பிரச்சனைகள் எழக்கூடும். இந்த பிரச்சனை பெரிதாகும் போது நமது அண்டை தேசத்தவர், ‘இவர்கள் தேசிய கீதத்திற்கு மதிப்பு தராதவர்கள்’ என்று கூறும் அவலம் ஏற்படும்.

விக்னேஷ் ( கல்லூரி மாணவர் )
ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் தேசிய கீதத்தின் மீது மரியாதையும் பக்தியும் உண்டு. பொது இடங்களிலோ, பள்ளிகளிலோ தேசிய கீதம் இசைக்கும் போது அங்கு இருக்கும் மக்கள் அனைவரும் அதற்கு மரியாதை கொடுத்து. ஒரு இடத்தில் நிலையாக நின்று தேசிய கீதம் பாடுவதை பார்க்க முடிகிறது. இது போன்ற சூழலில் திரையரங்கில் தான் தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்த வேண்டும் என்பது ஏற்புடையதாய் இல்லை. இந்த உத்தரவை விடுத்து அனைத்து அலுவலகங்களிலும், பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் அது நலமே.
இவ்வாறு பொதுமக்கள் திரையரங்குகளில் திரைப்படம் திரையிடப்படுவதற்கு முன்னதாக தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு பலவிதமான கருத்துக்களை முன் வைத்துள்ளனர்.