தமிழக முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 429 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

தழிழக முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 429 பயனாளிகளுக்கு ரூ.1,14,61,300 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாட்டில் விவசாயத் தொழிலில் ஈடுப்பட்டுள்ள விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் உழவர் பாதுகாப்பு திட்டத்தினை சட்டமன்றத்தில் முதலைமைச்சர் அறிவித்த இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்படி உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு திருமணம் மகப்பேறு முதியோர் ஒய்வூதியம், விபத்து, மரணம், மற்றும்  காயம் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு செலவு உதவித்தொகை போன்ற நலத்திட்டத்தின் கீழ் உறுப்பினர்களாக உள்ளவர்களின் குடும்பத்தினருக்கு கல்வி உதவித்தொகை போன்ற உதவித்தொகைகளும் வழங்கப்பட்டு வருகிறது.


இத்திட்டத்தில் சேர 250 ஏக்கருக்கு மேற்ப்படாத நன்செய் நிலத்தை அல்லது 5 ஏக்கருக்கு மேற்படாத புன்செய் நிலத்தை சொந்தமாக வைத்திருக்க வேண்டும். மேலும் அந்ந நிலத்தில் நேரடியாக பயிர் செய்யும் 18 வயது முதல் 65 வயது வரை உள்ள அனைத்து சிறு, குறு, விவசாயிகள் மற்றும் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலில் ஊதியத்திற்காகவோ அல்லது குத்தகை அடிப்படையிலோ ஈடுப்பட்டுள்ள 18 வயது முதல் 65 வயது வரை உள்ள அனைத்து குத்தகைதாரர்கள் மற்றும் தொழிலாளர்கள் இத்திட்டத்தின் கீழ் மூல உறுப்பினர்களாக பதிவு பெற தகுதி உள்ளவர்கள் ஆவர். மேலும் அவர்களை சார்ந்து வாழும் குடும்ப உறுப்பினர்களும் இத்திட்டத்தின் கீழ் உறுப்பினர்களாக பதிய தகுதியானவர்கள் ஆவர்.

உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உறுப்பினராவதற்கு கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை. சமூக நலத்தறையின் மூலம் செயல்படுத்தப்படும் திருமண உதவித்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவர். அவ்வாறு உதவித்தொகை பெற இயலாதவர்களும் உழவர் பாதுகாப்பு திட்டத்திலும் பயன்பெற தகுதியுடையவர் ஆவர். இதில் ஆண்களுக்கு ரூ.5,000 பெண்களுக்கு ரூ.10,000 திருமண உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆண்களுக்கு திருமண உதவித்தொகை இத்திட்டத்தின் மட்டுமே கிடைக்கப் பெறுகிறது.


சுகாதாரம்  மற்றும் குடும்பநலத்துறையில் கார்ப்பிணி பெண்கள் தங்களது பெயர்களை பதிவு செய்து கொண்டு பயன்பெறலாம். மகப்பேறு உதவித்தொகையை எளிதாக பெறும் வகையில் தனி வட்டாச்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) மூலம் தேவையான சான்றிதழ்கள் ஒருமுகப்படுத்தி வழங்கப்படும்.


முதுமை காரணமாக உடல் உழைப்புத்திறன் இல்லாதவராகவும் 50 வயது பூர்த்தியடைந்தவராகவும், வேறு எந்த ஆதரவும் இல்லாமல் இருப்பவராகவும் இருந்தால் மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டுகிறது.


விபத்தின் காரணமாக ஏற்பாடும் மரணத்திற்கு ரூ.1 இலட்சமும் உடல் உறுப்புகள் அங்ககீனம் ஏற்ப்பட்டால் பாதிப்பிற்கு தகுந்தவாறு ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.1 இலட்சம் வரை வழங்கப்படுகிறது. பதிவு பெற்ற உறுப்பினர் இயற்கையாக மரணம் அடைந்தால் அவர்தம் குடும்பத்திற்கு ரூ.10 ஆயிரமும் ஈமச்சடங்கிற்கு ரூ.2 ஆயிரத்து 500 வழங்கப்பட்டுள்ளது. காசநோய், புற்றுநோய், மற்றும் எச்.ஜ.வி. போன்ற உயிர்கொல்லி நோயினால் பாதிக்கப்பட்டால் மாதந்திர ஒய்வூதியமாக ரூ.1000 எச்.ஜ.வி யினால் தாய் மற்றும் தந்தை அல்லது இருவராயும் இழந்த குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதம் தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது. மேலும் சிறுநீரக கோளாறினால் டயாலிசிஸ் செய்து கொள்பவர்களுக்கு மாதந்திர ஒய்வூதியம் வழங்கப்படுகிறது. மேலும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 429 உழவர்களுக்கு ரூ.1,41,61,300 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் இதுவரையில் வழங்கப்பட்டுள்ளது. 


1.ஆறுமுகத்தாள் (65), தீத்திபாளையம்.


எனது பெயர் ஆறுமுகத்தாள். எனது கணவர் பெயர் மாரண்ணன். சொந்த ஊரு பேரூர்  அருகில் உள்ள தீத்திபாளையம். நானும் எனது கணவரும் விவசாயக் கூலியாக வேலை செய்து வருகிறோம். உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் பதிவு செய்துள்ளோம். கடந்த 3 மாதத்திற்கு முன்பு என் கணவர் இறந்துட்டாரு. கணவரை பிரிந்து கஷ்டப்பட்டு வாழ்ந்து வந்தேன். உழவர் பாதுகாப்புத் திட்டத்துல என் கணவர் இறந்ததுக்காக நிவாரண உதவித்தொகையாக ரூ.1,00,000 த்திற்கான காசோலையினையும். ஈமச்சடங்கு உதவித் தொகையாக ரூ.12,500 கொடுத்தது. இது எனது குடும்பத்திற்கு பேரூதவியாக இருந்தது. உழவர் பாதுகாப்புத் திட்டத்தை கொண்டுவந்து இதுபோன்ற உதவி செய்துவரும் முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியை தெரிவிச்சுக்குறேன்.


2.காயத்ரி கல்லூரி மாணவி, ராமப்பட்டினம். 


என் பெயர் காயத்ரி, என் அப்பா பெயர் ரவிச்சந்திரன். நாங்கள் ராமப்பட்டினம் பகுதியில் வசித்து வருகிறோம். நான் கற்பகம் பல்கழைக்கழகத்தில் பி.ஏ.ஆங்கிலம் பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வருகிறேன். எனது தந்தை விவசாய கூலி வேலை செய்து என்னை படிக்க வைக்கிறார். என் தந்தை தமிழ்நாடு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் பதிவு செய்துள்ளதால், எனக்கு உயர்கல்வி பெற கல்வி உதவிதொகையாக ரூ.1750 வருடம் ஒருமுறை கிடைக்கிறது. இந்த உதவி தொகை எனது கல்லூரி படிப்பை தொடர மிக உதவியாக உள்ளது. இது போன்று மாணவர்களின் கல்வி தடை படாமல் இருக்க பல்வேறு திட்டங்களை வழங்கி வரும் முதலமைச்சர் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...