கோவை, கொடிசிய வளாகத்தில் சனிக்கிழமையன்று மாலை 4:30 மணியளவில் ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் காமிட்டோ சார்பில் 3வது கோவை மினி மாரத்தான் நடைபெற்றது. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவங்கி வைத்தார்.

இப்போட்டியில், 2000த்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் 300க்கும் மேற்பட்ட மற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பத்மபூஷன் அருட்செல்வர் டாக்டர்.என் மகாலிங்கம் நினைவு விருது வழங்கப்பட்டது.

இதில், ஏபிடி லிமிடெட் நிர்வாக இயக்குனர் ஹரிஹர சுதர்சன், சங்கரா கல்லூரி துணை இணை செயலாளர் நித்யா ராமச்சந்திரன், பார்க் கல்வி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அனுஷா ரவி, ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் காமிட்டோ தலைவர் முகமது சபிக், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
