ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் ''நோ ஷேவ் நவம்பர்'' என்ற முறை ஆண்கள் மத்தியில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இவ்வருடம் நவம்பர் மாதம் சிறப்பான முறையில் முகத்தில் தாடி வளர்க்கும் ஆடவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கவும், இதன் மூலம் புற்றுநோய் குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் சார்பில் இன்று கோவையில் அமைந்துள்ள ஃபன் மாலில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி குறித்து ஃபூசன் மீடியா மேலாண்மை பங்குதாரர் ஜீவிதா கூறுகையில்,
ஃபூசன் மீடியா சார்பில் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வது இதுவே முதல் முறையாகும். இன்று ஃப்யூஷன் மீடியா கோயமுத்தூர் ரோட்டரி கிளப்புடன் இணைந்து சிறந்த தாடி வளர்க்கும் ஆடவர்களுக்கு போட்டி நடைபெற்றுள்ளது. இதன் மூலம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாங்கள் கடந்த மாதம் சிறந்த தாடி போட்டியில் ஆன்லைன் பதிவுக்கு அழைத்து உலகம் முழுவதும் 123 உள்ளீடுகளை பெற்றோம் . அதன் இறுதிப் போட்டிக்கு இன்று நடைபெறவுள்ளது. இதில் இருந்து 12 சிறந்த ஆண்கள் தேர்வு செய்யப்படுவர்'' என்றார்.

இப்போட்டியின் நீதிபதிகளாக கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவர் சுரேஷ் வெங்கடாச்சலம் புற்றுநோய் குறித்து சிறப்புரையாற்ற உள்ளார். பின், சத்யா என்.ஜே. பிரபல கோலிவுட் ஆடை வடிவமைப்பாளர் எட்வின், கோலிவுட் நடிகர் அபிஷேக் ஆகியோர் பங்கேற்கவுள்னர்.
