கோவை மாவட்ட சமூக நீதிக் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. அம்மனுவில் கூறியுள்ளதாவது:-
கோவை மாவட்டத்தில் கிணத்துக்கடவு, சூலூர், சுல்தான் பேட்டை, செஞ்சேரி மலை, அன்னூர், கீரணத்தம், கல்லிப்பட்டி, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக இரட்டைக் குவளை, சலூன்களில் முடிவெட்ட மறுப்பது, தனி சுடுகாடு உள்ளிட்ட பல்வேறு தீண்டாமைகள் நிலவிவருகிறது.
இதுகுறித்து கடந்த 10 வருடத்திற்கும் மேலாக புகார் அளித்தும் விசாரிக்க வரும் அதிகாரிகள் கையூட்டுப்பெற்றுவிட்டு நடவடிக்கை எடுக்காமல் சென்றுவிடுகின்றனர். எனவே மாவட்ட ஆட்சியர் இப்பிரச்சனையில் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும்.
மேலும், கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஆதிதிராவிட மாணவ, மாணவியர் விடுதிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை கூடுதலாக காட்டி விடுதி காப்பாளர்கள் சமையல் உள்ளிட்ட செலவுகளில் அரசிடம் கூடுதல் பணம் பெறுகின்றனர். பல விடுதிகளில் காப்பாளர்கள் விடுதிக்கு வருவதே இல்லை. 4 மாணவர்கள் மட்டுமே விடுதியில் உள்ள நிலையில் 60 மாணவர்கள் என கணக்கு காட்டி ஆயிரக் கணக்கில் ஒரு விடுதில் கொள்ளையடிக்கப்படுகிறது.

இதுகுறித்தும் மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என சமூக நீதிக் கட்சியின் கோவை மாவட்ட தலைவர் ந.பன்னீர் செல்வம் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளார்.