கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ரெட்டியாரூர் கிராமத்தில் கடந்த மூன்று மாதத்திற்கும் மேலாக குடிநீர் பிரச்சனை உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பல முறை புகார் அளித்தும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதைத்தொடர்ந்து, உடனடியாக மேற்குறிப்பிட்ட கிராமத்திற்கு குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி திடீரென அப்பகுதி கிராம மக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் காலிக் குடங்களுடன் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.
இச்சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.