கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் 27-வது வார்டுக்கு உட்பட்ட சின்னவேடம்பட்டி பகுதிகளில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதை மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து, சின்னவேடம்பட்டி ராமர்கோயில் வீதியில் வசிக்கும் வீடுகளுக்கு செல்லும் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும் மாநகராட்சி துணை ஆணையர் பார்வையிட்டார்.

பின், அதேப் பகுதியில் கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று தண்ணீர் தொட்டிகளில் அபேட் மருந்தினை ஊற்றுவதையும், அப்பகுதியில் உள்ள மாநகராட்சி பொது கழிப்பிடத்தையும் அவர் பார்வையிட்டார்.

இதையடுத்து, சின்னவேடம்பட்டி பழைய போஸ்ட் ஆபீஸ் வீதியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள தனி நபர் கழிப்பிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வுகளின் போது மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதியுடன் நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், உதவி நகரமைப்பு அலுவலர் ஜெயலட்சுமி, வடக்கு மண்டல உதவி ஆணையர் சரவணக்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்