கோவை கொடிசியா வளாகத்தில் டிசம்பர் 23 முதல் 2017 ஜனவரி 1ம் தேதி வரை கோவை சாப்பீங் திருவிழா நடைபெறவுள்ளது. இந்த 10 நாள் கண்காட்சியில் பல்வேறு நிறுவனங்களின் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன.
இக்கண்காட்சியில், வீட்டு அழங்காரப் பொருட்கள், இயற்கை உணவுகள், பரிசுப் பொருட்கள், சூரிய சக்தியால் இயங்கும் கருவிகள், நீர்சுத்திகரிப்பு இயந்திரம், பாதுகாப்பு கருவிகள் மற்றும் கைவினைப் பொருட்கள் என பலதரப்பட்ட பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. மேலும், இக்கண்காட்சியில் 400 அரங்குகள் அமைக்கப்படவுள்ளன.
இதுகுறித்து கோவை சாப்பீங் திருவிழா தலைவர் கே.விஷ்வநாதன் கூறுகையில், கோவையில் சுற்றுலாவை ஊக்குவிக்க இந்த கோவை சாப்பீங் திருவிழா 2016 ஒரு கருவியாக இருக்கும். கொங்குப்பகுதியில் தொழில் மற்றும் வளர்ச்சியை ஒரு முன்னேற்றுப் பாதையில் எடுத்துச் செல்லும். அதே வேலையில் கோவையில் ஒரு பெருமை மிகு நிகழ்வாக இந்த சாப்பீங் திருவிழா அமையும்'' என்றார்.
மேலும், இந்நிகழ்வில் சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றம், புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி ஆகியோரின் நாட்டுப்புர பாட்டு கலைநிகழ்ச்சிகளும் இந்த கண்காட்சியின் ஒரு பகுதியாக நடைபெறவுள்ளது.
இக்கண்காட்சியில் உணவுக்கு என்று தனி அரங்கும், குழந்தைகளுக்கான விளையாட்டு அரங்கும் அமைக்கப்படவுள்ளது. மேலும் பணமில்லா பரிவர்த்தனைக்காக ஏடிஎம் அட்டை பயன்படுத்தும் கருவியும் பொருத்தப்பட உள்ளது.
இதற்கான நுழைவுக் கட்டணம் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இலவசமாகவும், அதற்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.30 ம் வசூழிக்கப்பட உள்ளது. மேற்குறிப்பிட்ட தேதிகளில் காலை 11 மணி முதல் மாலை 8 மணி வரை இக்கண்காட்சி நடைபெறும்.