கோவையில் பேருந்து மோதி சாலை விபத்தில் இறந்தவருக்கு இழப்பீடு வழங்காததால் அரசு போக்குவரத்துக் கழக பேருந்தினை ஜப்தி செய்து நீதிமன்ற ஊழியர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மருதமலை பகுதியை சேர்ந்த வெங்கடபிரசாத் கடந்த மார்ச் 31ம் தேதியன்று அரசு பேருந்து மோதி சாலை விபத்தில் பலியானார்.
இதைத்தொடர்ந்து, இவரது மனைவி சரோஜா தொடர்ந்த வழக்கில் 15.90 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க மோட்டார் வாகன இழப்பீடு நீதிமன்றம் உத்திரவிட்டது. இந்த இழப்பீட்டுத்தொகை தற்போது வரை போக்குவரத்துக் கழகம் வழங்காத நிலையில், அரசு பேருந்தினை ஜப்தி செய்து நீதிமன்ற ஊழியர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.