கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் 17-வது வார்டுக்கு உட்பட்ட கல்வீரம்பாளையம் பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்குச் செல்லும் துப்புரவு பணியாளர்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை கோவை மாநகராட்சி ஆணையரும் தனி அலுவலருமான க.விஜயகார்த்திகேயன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து, அதேப் பகுதியில் கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று அபேட் மருந்தினை தண்ணீர் தொட்டிகளில் ஊற்றுவதையும், தேவையற்ற பொருட்களை அகற்றும் பணியில் ஈடுபடுவதையும் அவர் ஆய்வு செய்தார்.

பின், கல்வீரம்பாளையத்திற்கு உட்பட்ட விநாயகர் கோவில் வீதியில் செயல்பட்டு வரும் ஒரு கடையில் 50 மைக்ரானுக்கும் குறைவாக இருந்த பாலத்தீன் பைகளை பறிமுதல் செய்த க.விஜயகார்த்திகேயன் தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு பாலித்தீன் பைகளால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தொடர்ந்து, மருதமலை முருகன் நகரில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகால் வாரியத்தையும், மருதலை அன்னை இந்திரா நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது ஒதுக்கீட்டு இடத்தையும் ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வுகளின் போது மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்திகேயனுடன் மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, உதவி ஆணையர் கே.ராமைய்யா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.