சிறுவாணி சாலை, பூண்டி பகுதி, மற்றும் பாலக்காடு சலையில் தாழ்த்தபட்ட மக்களுக்கு என ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை மீட்டுத்தரக்கோரி கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு சமூக நீதிக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம் பேசுகையில்,'காருண்யா, ஈஷா, அமிர்தா மற்றும் சுஸ்லான் போன்ற தனியார் நிறுவனங்கள் பழங்குடியின மக்களுக்கு அரசு வழங்கிய நிலங்களை ஆக்கிரமித்து வருகின்றனர். உடனடியாக அதை தடுத்து நிறுத்தி, அபகரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சம்மந்தப்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.