கடந்த சில நாட்களாக கோவையில் நாய் போல தோற்றத்துடன் கூடிய கார் ஒன்று வலம் வந்து கொண்டிருந்தது. நேற்று இந்த கார் ஜி.பி. சிக்னல் அருகே வந்த போது அங்கு வாகன தனிக்கையில் ஈடுபட்டிருந்த கோவை மாநகர கிழக்கு பிரிவு போக்குவரத்து போலீசார் காரை நிறுத்தி சோதனையிட்டனர். கர்நாடக பதிவெண் கொண்ட அந்த கார் சின்ன சேலம் பகுதியை சேர்ந்த குமார் என்பவருடயது என்பது தெரியவந்தது.இதை தொடர்ந்து, வட்டார போக்குவரத்து அதிகாரி அனுமதியின்றி காரை வடிவம் மாற்றியதாக வழக்கு பதியபட்டது.மேலும், அவருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

