கோவையில் அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் சிறுதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை காந்திபுரம் பகுதியிலிருந்து சரவணம் பட்டிக்கு  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தடம் எண் 111A என்னும் பேருந்து  இயக்கப்பட்டுவருகிறது.

இந்த நிலையில் பேருந்து பழதானதையடுத்து பேருந்தின் நடத்துனர் பயணிகளை  இறக்கிவிட்டு சுங்கம் பகுதியிலுள்ள பணிமனைக்கு  பேருந்தை ஓட்டி சென்றுள்ளார். அப்போது திருச்சி சாலை ரெயின்போ பகுதியில் வரும் போது  எதிர்பாராத  விதமாக  பேருந்தின்  முன்பகுதியிலிருந்து புகை வர ஆரம்பித்துள்ளது. 



இதனை பார்த்த ஓட்டுனர்பேருந்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கியுள்ளார்,அப்போது திடீரென பேருந்து தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இதை அடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு  வந்த தீயணைப்பு துறையினர் பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்து தண்ணீரை பீச்சியடித்து தீயை அணைத்தனர்.

பேருந்தில் திடீரென தீப்பற்றியெரிந்ததால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக காணப்பட்டது. இதனால்  வாகன ஓட்டிகள் சிறிது   நேரம் சிரமத்துக்குள்ளாயினர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...