இருசக்கர வாகன ஓட்டிகளை பெரிதும் கவரும் வகையில் எம்.ஆர்.எப் "மசஸ்டர்டயர்" அறிமுகம்

இந்தியாவின் மிகப் பெரிய டயர் உற்பத்தி நிறுவனமான  எம்.ஆர்.எப்  ''மசஸ்டர்டயர்'' என்னும் இருசக்கர வாகனத்திற்கான நிகழ்ச்சியை நடத்தியது. மசஸ்டர்டயர் என்பது இருசக்கர வாகனங்களை சாலையில் நேர்த்தியாக இயக்குவது ஆகும். அதற்கு வாகனத்தின் டயர் மிகவும் கட்சிதமாக இருக்க வேண்டும். இந்நிகழ்ச்சியில், மசஸ்டர்டயர் இயக்குவதில் நேர்த்திபெற்றவர்கள் பஙகேற்று  எம்.ஆர்.எப்  டயரின் தொழில்நுட்பம் மற்றும் எவ்வித சாலையிலும் இயக்கத்தகுந்த  எம்.ஆர்.எப்  டயரை சோதனையிட்டனர்.

இவ்விழாவில்  எம்.ஆர்.எப்  லிமிட்டெட் விற்பனை நிர்வாக துணைத் தலைவர் கொஷி வர்கீஸ் பேசியதாவது:-

மக்களுக்கு மசஸ்டர் குறித்து அடிப்படை அறிவும், அனுபவமும் இருந்தால் மட்டுமே அதனை சரியான முறையில் இயக்க முடியும். டயரின் திறன், தன்மை மற்றும் தொழில் நுட்பம் ஆகியவை மசஸ்டர்க்கு மிக முக்கியம். சரியான பாதை, திறன்மிக்க டயர், அனுபவங்கள் இருப்பின் இந்த பயணம் மிக  நன்றாக அமையும். மேலும், இதில் ஈடுபடுபவர் தகுந்த பாதுகாப்புடன் ஈடுபட வேண்டும்'' என்றார்.

மசஸ்டர் டயர் இருசக்கர வாகனங்களுக்கு என பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் 150 சிசி மற்றும் அதற்கு மேலே உள்ள திறன்கொண்ட இருசக்கர வாகனத்தில் மட்டுமே இது சரியான முறையில் இயங்கும். இந்த டயர் ஒரு மென்மையான கலவை மற்றும் விசேஷமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கடுமையான சாலையினையும் இந்த வகை டயர்கள் எளிதாக கடக்கும். செங்குத்தான வளைவுகளில் செல்லவும் இது சிறப்பாக உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், எம்.ஆர்.எப் டயர் சோதனைக் குழு மசஸ்டர் டயரினை அறிமுகம் செய்து அதன் சிறப்புகளை எடுத்துரைத்தனர். அப்போது மசஸ்டர் டயர் ஓட்டுநர்களுக்கு ஒரு புதுவித அனுபவத்தை தரும் எனவும், பல்வேறு தொழில்நுட்பங்களால் தயாரிக்கப்பட்டுள்ள மசஸ்டர் டயர் வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியளிக்கும் என்றும் பேசினர். தொடர்ந்து, இதன் தயாரிப்பில் மேற்கொள்ளப்பட்ட வழிமுறைகள், தொழில்நுட்பம், வடிவமைப்பு உள்ளிட்டவை குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...