கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் உயர்நீதிமன்ற ஆணைப்படி மாவட்ட ஆட்சித் தலைவர் ஹரிஹரன், மாநகராட்சி ஆணையர் கே.விஜயகார்த்திகேயன் ஆகியோர் ஒருங்கிணைந்து அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பலகைகள் உடனடியாக அகற்றுவதற்காக நடவடிக்கை மேற்கொள்ள உத்திரவிட்டு அதன்படி அக்டோபர்-2016 முதல் இதுவரை அனுமதியின்றி வைக்கப்பட்ட 2,383 விளம்பர பலகைகள் அகற்றப்பட்டுள்ளன. குறிப்பாக ராஜா தெரு, கருப்பை கவுண்டர் தெரு, என்.எஸ்.ஆர். ரோடு, விளாங்குறிச்சி ரோடு, அவினாசி ரோடு, அவினாசி ரோடு முதல் நவ்இன்டியா சாலை இணைப்பு வரை அனுமதியின்றி வைக்கப்பட்ட மொத்தம் 35 விளம்பர பலகைகள் அகற்றப்பட்டுள்ளது.
மேலும், பொது மக்களுக்கு இடையூறாக மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள விளம்பர பலகைகள் அகற்ற மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர் மூலம் அனைத்தும் பகுதிகளிலும் கண்காணிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் அனுமதியின்றி பேருந்து நிலையம், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பிரதான சாலைகள் ஆகியவற்றிலும் கண்டறிந்து விளம்பர பலகைகள் உடனடியாக அகற்றப்படுவதுடன் தொடர்புடைய நபர்கள் மீது கடும்நடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.