வடகோவை, சென்ட்ரல் திரையரங்கு வளாகத்தில் காஸ்மோ வில்லேஜ், இந்தியன் பவுண்டேஷன் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் ஜல்லிக்கட்டு குறும்படத்தின் பட பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து நடிகர் விஜய் நடித்துள்ள பைரவா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. இதில் காஸ்மோ வில்லேஜ் சிவகுமார், இந்தியன் பவுண்டேஷன் ஜான் அமலன், நாம் தமிழர் கட்சியின் அப்துல் வஹாப், ஜோஷுவா எடிசன், ஜல்லிக்கட்டு குறும்படத்தின் இயக்குனர் சதிஷ் பழனிச்சாமி, படக் குழுவினர் மற்றும் கோவை விஜய் ரசிகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.