மதுக்கரை வனப்பகுதியில் ஆந்த்ராக்ஸ் நோயால் ஆண் யானை பலி

கோவை மாவட்டம், மதுக்கரை வனப்பகுதியில் ஆண் யானை இறந்துகிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவக் குழுவினர் உயிரிழந்த காட்டு யானையை சோதனையிட்டனர்.

தொடர்ந்து, அதனை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்திய கால்நடை மருத்துவர் மனோகரன் கூறுகையில், தற்போது மதுக்கரை வனப்பகுதியில் உரியிழந்திருப்பது ஆண் காட்டு யானை, சுமார் 20 வயதிருக்கும். இந்த யானைக்கு ஆந்த்ராக்ஸ் எனப்படும் கிருமித் தொற்று நோய் ஏற்பட்டுள்ளது. யானைக் கூட்டத்திற்கு இடையே ஏற்பட்ட மோதலில் காயம் ஏற்பட்டு கிருமிதொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது" என்றார். 

மேலும், இப்பகுதியில் வனவிலங்குகள் மற்றும் கால்நடைகளிடையே கிருமி தொற்று ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், கால்நடை விலங்குகளுக்கு தடுப்பூசி, சுற்றுப்புரத்தில் சுகாதாரத்தைபேனுதல் உள்ளிட்டவை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...