பர்கூர் வனச்சரகத்தில் வயிற்றுப்புண் காரணமாக ஆண் காட்டு யானை உயிரிழப்பு


பர்கூர் வனச்சரகம், தென்பர்கூர் காப்புக்காடு பேரதட்டைப்பள்ளம் சரகத்தில் வனத்துறை தனிக்குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் ஆண் காட்டு யானை ஒன்று இறந்த நிலையில் கண்டறியப்பட்டது.



இதைத்தொடர்ந்து, ஈரோடு மாவட்ட வன அலுவலர் பி.ஜி.அருண்லாலின் (பொ) உத்தரவின்படி, இன்று சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனத்துறை கால்நடை மருத்துவர் கே.அசோகன், யானையின் உடலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தி இரண்டு தந்தங்களும் கைப்பற்றப்பட்டது.

இதுகுறித்து, பிரேத பரிசோதனையில் ஈடுபட்ட கால்நடை மருத்துவர் தெரிவிக்கையில், இறந்த ஆண் யானைக்கு சுமார் 6 வயது இருக்கும். இந்த யானை வயிற்றுப்புண் காரணமாக இறந்துள்ளது என தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, யானையின் உடல் அப்பகுதியிலேயே எரியூட்டப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...