பலத்த காயமடைந்த சிறுமிக்கு சிகிச்சை வழங்காமல் அலைக்கழிக்கும் கோவை அரசு மருத்துவமனை- உறவினர்கள் குற்றச்சாட்டு


திருப்பூரில் பலத்த காயமடைந்த நான்கு வயது சிறுமிக்கு சிகிச்சை கொடுக்காமல் கோவை அரசு மருத்துவமனை நிர்வாகம் அலைகழிப்பதாக சிறுமியின் உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். 

திருப்பூர் மாவட்டம் தேவராயம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஸ் இவரது நான்கு வயது மகளை அவரது பக்கத்து வீட்டு காரரான அப்பாஸ் என்பவர் குடிபோதையில் கடைக்கு கூட்டி செல்வதாக அழைத்து சென்று பாலியல் தொந்தரவுக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதில் சிறுமி பலத்த காயமடைந்த நிலையில் அனுப்பர்பாளையம் போலிஸார் அப்பாஸை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த  சிறுமியை உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர். ஆனால் காலை 7 மணி முதல் சிறுமிக்கு சிகிச்சைக்காக அனுமதிக்காமல் மருத்துவமனை நிர்வாகம் அலைக்கழித்து வருவதாகவும், காயத்துடன் நீண்ட நேரம் வெளியிலேயே காத்திருப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். 

அதே போல் அப்பாஸை கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...