திருப்பூரில் பலத்த காயமடைந்த நான்கு வயது சிறுமிக்கு சிகிச்சை கொடுக்காமல் கோவை அரசு மருத்துவமனை நிர்வாகம் அலைகழிப்பதாக சிறுமியின் உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் தேவராயம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஸ் இவரது நான்கு வயது மகளை அவரது பக்கத்து வீட்டு காரரான அப்பாஸ் என்பவர் குடிபோதையில் கடைக்கு கூட்டி செல்வதாக அழைத்து சென்று பாலியல் தொந்தரவுக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதில் சிறுமி பலத்த காயமடைந்த நிலையில் அனுப்பர்பாளையம் போலிஸார் அப்பாஸை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமியை உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர். ஆனால் காலை 7 மணி முதல் சிறுமிக்கு சிகிச்சைக்காக அனுமதிக்காமல் மருத்துவமனை நிர்வாகம் அலைக்கழித்து வருவதாகவும், காயத்துடன் நீண்ட நேரம் வெளியிலேயே காத்திருப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
அதே போல் அப்பாஸை கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.