"விபத்தில்லா 2017ம் வருடத்தின்" துவக்கமாக புத்தாண்டு தினத்தன்று கோவை மாநகரில் 22 இடங்களில் விரிவான தனிக்கை மேற்கொள்ளப்படும். மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்களுக்கும், பிற வாகன ஓட்டுநர்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை ஓட்டக் கூடாது.
கோவை மாநகர காவல் துறையின் இந்நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் ஒத்துழைப்பு தந்து 2017 புத்தாண்டு தினத்தை விபத்தில்லா தினமாக கொண்டாட வேண்டும் என கோவை மாநகர காவல் ஆணையர் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் தெரிவித்துள்ளார்.