மோசடி, நம்பிக்கை மோசடி என இருபிரிவில் பா.ஜ.க தேசிய இளைஞரணி துணை தலைவர் மீது வழக்கு பதிவு

கோவையை சேர்ந்த பா.ஜ.க தேசிய இளைஞரணி துணை தலைவர் முருகானந்தம் மீது மோசடி, நம்பிக்கை மோசடி என இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், சாவடிப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரசாமி கவுண்டர். விவசாயியான இவர் தனது மகள் ஞானசௌந்தரியை கடந்த 2009 ஆம் ஆண்டு பா.ஜ.க தேசிய இளைஞரணி துணை தலைவர் முருகானந்தத்திற்கு திருமணம் செய்து வைத்துள்ளார். 

இந்நிலையில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஞானசௌந்தரி அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதற்கிடையே மகளின் திருமணத்தின் போது கொடுக்கப்பட்ட ரூ.ஒரு கோடியே 30 லட்சம் மதிப்பிலான நிலம் மற்றும் நகைகளை திருப்பி வழங்குமாறு சுந்தரசாமி கவுண்டர் முருகானந்தத்திடம் முறையிட்டுள்ளார். 

ஆனால், அதற்கு முருகானந்தம் உரிய பதிலளிக்காததால், கோவை மாநகர காவல்துறை ஆணையர் அறிவுறுத்தலின்படி காந்திபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க அலைகழிக்கப்பட்டதால் கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் மாதம் சுந்தரசாமி மனு தாக்கல் செய்தார். 

மனுவை விசாரித்த நீதிமன்றம், கடந்த மாதம் இந்த புகார் குறித்து விசாரிக்க உத்தரவிட்டது. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் காந்திபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பா.ஜ.க தேசிய இளைஞரணி துணை தலைவர் முருகானந்தம், அவரது தந்தை பழனிசாமி கவுண்டர், தாயார் வள்ளியம்மாள் ஆகியோர் மீது மோசடி, நம்பிக்கை மோசடி ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

தொடர்ந்து இந்த புகார்கள் குறித்து பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோருக்கு கடிதம் அனுப்பவுள்ளதாக பாதிக்கப்பட்ட சுந்தரசாமி கவுண்டர் தெரிவித்துள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...