கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் மத்திய மண்டலம் வார்டு எண்-82 உக்கடம் நவாப் அகீம் சாலையில் மாநகராட்சி வணிக வளாகத்தில் நடைபாதையில் உள்ள ஆக்கிரமிக்கப்பட்ட கடைகளை மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் உதவியுடன் அகற்றப்பட்டது.

உதவி வருவாய் அலுவலர் மற்றும் உதவி நகரமைப்பு அலுவலர், மாநகராட்சி அலுவலர்கள், காவல் துறையினர் உதவியுடன் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.