கோயமுத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் 13வது வார்டுக்குட்பட்ட சாய்பாபா காலனி, என்.எஸ்.ஆர் ரோடு பகுதியில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியையும், ஜானகி நகர் பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா பராமரிப்பு வேலை நடைபெறுவதையும் மாநகராட்சி துணை ஆணையர் காந்திமதி நேரில் சென்று பார்வையிட்டார்.

அதேபோல் தடாகம் ரோடு வேலாண்டிபாளையம் பகுதியில் ரூ.67லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகால் வாரிய பணிகள் நடைபெற்று வருவதை மாநகராட்சி துணை ஆணையர் காந்திமதி நேரில் சென்று பார்வையிட்டார். இதில் நகர்நல அலுவலர் சந்தோஷ்குமார், உதவி ஆணையர் ராமைய்யா, உதவி நகரமைப்பு அலுவலர் ரவிசந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.