மூளைச் சாவு அடைந்த வாலிபர் 5 பேருக்கு மறுவாழ்வு அளித்தார்

கோவை, தொப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் (வயது 35), மனைவி மஞ்சு, இவருக்கு இரு பெண் குழந்தைகள், தாயார் நாகம்மாள், மற்றும் சகோதரர் சுப்ரமணியம், ஆகியோருடன் வசித்து வந்தார். விஜயகுமார் கடந்த 26ம் தேதி மதியம் 1.40 மணியளவில் துடியலூரில் உள்ள அவர் வேலை செய்யும் லேத் கம்பெனியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது என்.ஜி.ஜி.ஒ காலனி கேட் அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக எதிரே வந்து கொண்டிருந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து இவரது இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் விஜயகுமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 

உடனடியாக அவர் துடியலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அன்று இரவு 8.30 மணியளவில் மேல் சிகிச்சைக்காக அவர் கே.எம்.சி.எச் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் அவரது உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் 27ம் தேதி மாலை 4.30 மணியளவில் அவர் மூளைச்சாவு அடைந்ததாக கே.எம்.சி.எச் மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவர்களும்  உறுதி செய்தனர்.

அதனை தொடர்ந்து விஜயகுமார் குடும்பத்தார், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். இதன் படி விஜயகுமார் உடல் உறுப்புகள் 28.12.16 அன்று தானமாக பெறப்பட்டு, கல்லீரல் மற்றும் இரு சிறுநீரகங்கள் கே.எம்.சி.எச் மருத்துவமனைக்கும், கண்கள் கோவையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...