கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமும் பிஎஸ்என்எல் நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர். அதன் மூலம் நீண்டகால வாடகையில் பைபர் தொடர்பு (Fibre connectivity) பல்கலைக்கழகத்தின் அனைத்து வேளாண் தொழில்நுட்பத் துறைகளுக்கும் கிடைக்கும். மேலும் மாணவர்களின் வசதிக்காக டெலிகாம் வசதியும் இந்த ஒப்பந்தத்தின் வழி கிடைக்கும்.

பல்கலைக்கழக துணைவேந்தர் இராமசாமி மற்றும் பி.எஸ்.என்.எல். கோவைப் பகுதி முதன்மைப் பொது மேலாளர் சிவராஜ் ஆகியோர் முன்னிலையில் பல்கலைக்கழக பதிவாளர் ஆனந்தகுமார் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார். வேளாண் பொறியியல் கல்லூரி முதன்மையர் திவாகர் துரைராஜ், தகவல் தொழில்நுட்ப பேராசிரியர் மற்றும் தலைவர் துரைசாமி மற்றும் பல்வேறு பி.எஸ்.என்.எல் அதிகாரிகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.