ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி வீரத்தமிழர் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்


வீரத்தமிழர் முன்னணி சார்பில் ஜல்லிக்கட்டிற்கு தடையை நீக்கக்கோரியும், பீட்டா அமைப்பை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் இன்று காலை 11 மணி அளவில் கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் வீரத்தமிழர் முன்னணி மண்டல பொறுப்பாளர் அருண் ரங்கராஜன் தலைமையில் நடைபெற்றது.



செய்தியாளர்களிடம் பேசிய அவர்:- தமிழ்நாட்டில் தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டை தடைசெய்த உச்சநீதி மன்றத்தையும், தனி சட்டம் இயற்றி ஆவணம் செய்யாத மத்திய அரசை கண்டித்தும் வீரத்தமிழர் முன்னணி இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது.தமிழர்கள் 5 ஆயிரம் ஆண்டுகளாக ஏறுதழுவல் என்னும் இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்தி கொண்டிருக்கிறார்கள். அதை அமெரிக்காவை சேர்ந்த பீட்டா அமைப்பு வழக்கு தொடர்ந்து தடை செய்வது என்பது தமிழர்களின் பண்பாட்டின் இறையாண்மையை மீறும் செயல். 5 ஆண்டுகள் தமிழர்கள் நடத்தும் இந்த போட்டியை தொடர்ந்து 3 ஆண்டுகளாக மத்திய அரசு தடை செய்து வைத்திருக்கிறது. காவிரி உரிமை சிக்கலில் தமிழக அரசுக்கு எதிராக நடக்கும் மத்திய அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காத மத்திய அரசு ஜல்லிக்கட்டிற்கு மட்டும் தடை விதிப்பது புறம்பானது. 

எனவே நாம் தமிழர் கட்சியும் வீரதமிழர் முன்னணி வருகின்ற தை மாதத்தில் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு போட்டியை உறுதியாக இந்த மண்ணில் நடத்திக்காட்டுவோம் என்றும் இந்த மண்ணில் எங்கள் காளைகள் ஓடும் என்பதை உறுதியளிக்கிறோம். இந்த ஜல்லிக்கட்டு தடைக்கு பின்பாக ஒரு சர்வதேச சாதி இருக்கிறது அதற்கு கூலியாகத்தான் பீட்டா அமைப்பு செயல்படுகிறது. இதனால் தான் மத்திய அரசும் தமிழகத்திற்கு ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு தடை விதித்துள்ளது. இந்த தடையை நாம் தமிழர் கட்சியும் வீரதமிழர் முன்னணி முறியடிப்போம் இவ்வாறு அவர் கூறினார். 





Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...