பணமதிப்பிழப்பை அறிவித்து, பொய் வாக்குறுதிகள் கொடுத்த மத்திய அரசை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சி.பி.ஐ ( எம்.எல் ) கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பழைய ஐநூறு ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததோடு, 50 நாட்களில் பிரச்சனைக்கள் தீர்க்கப்படும் எனக்கூறி இருந்தது ஆனால் ஐம்பது நாட்கள் கடந்தும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதும், பிரதமர் மோடியின் வாக்குறுதி பொய்யாகி விட்டாதகவும் கூறி கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு சி.பி.ஐ ( எம்.எல் ) கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் கடன் நிலுவை வைத்திருக்கும் கார்பெரேட் நிறுவனங்களின் பட்டியலை வெளியிட வேண்டும் எனவும், தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும், மாணவர்கள் கல்வி கடனை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர். போராட்டம் நடந்துகொண்டு இருக்கும்போதே, அங்கிருந்த காவல்துறை ஆய்வாளர் மைக்கை பிடுங்கியதால் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
மேலும் மற்ற கட்சிகள் பிளகஸ் பேனர்கள் வைத்தாலும் காவல்துறை கண்டுகொள்வதில்லை எனவும்,மக்களுக்காக போராடும் கட்சிகளிடம் மட்டுமே காவல்துறை அடக்குமுறைகளை கையாளுவதாக குற்றம் சாட்டினர்.