பீட்டா அமைப்பு 34 ஆயிரம் உயிரினங்களை கொன்றுள்ளதாக அமெரிக்கர்கள் குற்றச்சாட்டு


ஜல்லிக்கட்டு விளையாட்டு என்பது ஒரு மூடநம்பிக்கை என்றும், பிற்போக்குத்தனமானது என்றும், விலங்குகளைத் துன்புறுத்தி, மனிதர்களைக் காயப்படுத்தும் காட்டுமிராண்டித் தனம் என்றும் உச்ச நீதிமன்றத்தில் வாதாடி ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடையை பெற்றுத்தந்த அமைப்பு 'பீட்டா'. 

1989-ம் ஆண்டு அமெரிக்காவில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு விலங்குகள் காப்பகம் ஒன்றை நடத்தி வருகிறது. அதனால், இந்த அமைப்புக்கு வரும் நன்கொடைகளுக்கு வரிவிலக்கு அளித்து அமெரிக்க அரசு உத்தரவிட்டது. 

இந்த நிலையில், பீட்டா அமைப்பு தொடங்கியது முதல் இதுவரை சுமார் 34 ஆயிரம் விலங்குகளை அந்த அமைபினர் கொன்று குவித்ததாக அமெரிக்கர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

பீட்டா விலங்குகள் பாதுகாப்பு அமைப்பிற்குள் கொண்டுவரப்படும் விலங்குகளில் 97 சதவிகிதம் கொல்லப்படுவதாக அரசு ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் நுகர்வோர் சுதந்திர மையம் என்ற ஒரு தன்னார்வ தொண்டு அமைப்பு, 'பீட்டா விலங்குகளை கொல்கிறது' (petakillsanimals.com) என்ற பெயரில் இணையதளம் ஒன்றை துவங்கி அதற்கு ஆதரவாளர்களை திரட்டி வருகிறார்கள். மேலும், அந்த நாடு முழுவதும் பீட்டா அமைப்புக்கு எதிரான விளம்பரப்பலகைகள் வைத்து, பீட்டாவை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். 

நாளொன்றுக்கு சராசரியாக 6 விலங்குகள் பீட்டா அமைப்பினரால் கொல்லப்படுவதாக கூறும் நுகர்வோர் சுதந்திர மையம், பீட்டவிற்குள் கொண்டுவரப்படும் நாய் மற்றும் பூனைகள் அடுத்த 24 மணி நேரத்தில் கொல்லப்படுகிறது என்ற வெர்ஜீனியாவின் கால் நடைத்துறையின் 2010ம் ஆண்டு ஆய்வை சுட்டிக்காட்டியுள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...