சம ஊதியம் வழங்கக் கோரி மாநகராட்சி ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


கோவை மாநகராட்சியில் 2000-க்கும் மேற்பட்ட ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு சம ஊதியம் வழங்கக் கோரி அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் சார்பில் மாநகராட்சி அலுவலகத்தில் ஆர்பாட்டம் நடைபெற்றது. 

இதில், நிரந்தர ஊழியர்களை விட கூடுதலாக தாங்கள் பணியாற்றி வருவதால் அவர்களுக்கு வழங்கும் ஊதியத்தை போல தங்களுக்கும் வழங்க வேண்டும். நாள் ஒன்றுக்கு 200 ரூபாய் என்ற விகிதத்தில் மாதம் 6000 ரூபாய் மட்டுமே ஊதியம் வழங்கப்படுவதாகவும்  சென்னை புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்ய அதிக அளவில் ஒப்பந்த தொழிலாளர்களே ஈடுபடுத்தப்பட்டதாகவும் குறைந்த கூலியில் வேலை செய்யும் பணியாளர்கள் கவுரவமாக  நடத்தப்படுவதில்லை என குற்றம் சாட்டினர். 

மேலும், தொழிலாளர் சட்டவிதி 25 (5)அ -வின் படி நிரந்தர பணியாளர் செய்யும் அதே வேலையை செய்யும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சம வேலைக்கு சம ஊதியம் என்பதை மாநில அரசும் மாநகராட்சி நிர்வாகமும் அமல்படுத்த மறுத்து வருகிறது.

தொழிலாளர் நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் மாநகராட்சி மற்றும் ஒப்பந்ததாரர்கள் ஆஜராகாமல் உள்ளதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இப்பிரச்சனையில் மாநகராட்சி நிர்வாகம் தலையிட்டு தீர்வு காணாவிட்டால் மாநகர ஆணையர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...