கோவை மாவட்டம், போளுவாம்பட்டி மலையடிவாரப் பகுதி என்பதால் காட்டு யானைகள் அதிகளவில் சுற்றித் திரிவது வழக்கம். அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளிலும் காட்டு யானைகள் புகுந்து குடியிருப்பு பகுதி மற்றும் விவசாய நிலங்களை சேதப்படுத்தும்.

இந்நிலையில், இன்று போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட கோவை குற்றாலம் அருகே வெள்ளபதி பகுதியில் யானை தாக்கி வெள்ளியங்கிரி (70) என்பவர் உயிரிழந்தார். அவரது மனைவி பாக்யவதி (58) யானை தாக்கியதில் காலில் பலத்த காயமடைந்தார். இதைத்தொடர்ந்து, பாக்யவதியை மீட்ட அப்பகுதியினர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அவரது மனைவி பாக்கியவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
