பிரபல தங்க நகைக் கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை

கோவை, அசோக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார். இவர் ராஜவீதி பகுதியில் முத்ரா ஜுவல்லர்ஸ் என்ற பெயரில் தங்கநகைக் கடை மற்றும் முத்ரா புல்லியன்ஸ் என்ற பெயரில் தங்கக்கட்டி விற்பனையும் செய்து வருகிறார். 

இந்த நிலையில் சிவகுமார் முறையாக வருமான வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாக வருமானவரித் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் 6 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் குழுவினர் சிவகுமாரின் கடையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையின் போது, வியாபாரம், பணபரிவர்த்தனை உள்ளிட்டவை தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் வருமான வரித்துறை சோதனைக்குப் பின் வரி செலுத்தியது மற்றும் தங்கம் விற்பனை தொடர்பான ரசீதுகள் உள்ளிட்ட சில முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கொண்டு சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால், அங்கு சோதனை எதுவும் நடத்தப்படவில்லை எனவும், வருமான வரி தொடர்பான விசாரணை மட்டுமே நடத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சமீபத்தில் சேகர்ரெட்டி, முன்னாள் தமிழக தலைமை செயலாளர் ராமமோகன ராவ் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்திய நிலையில், கோவையில் தங்க நகை கடையில் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...